/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வழித்தடத்தை மீண்டும் ஏற்படுத்த கோரி முறையீடு வழித்தடத்தை மீண்டும் ஏற்படுத்த கோரி முறையீடு
வழித்தடத்தை மீண்டும் ஏற்படுத்த கோரி முறையீடு
வழித்தடத்தை மீண்டும் ஏற்படுத்த கோரி முறையீடு
வழித்தடத்தை மீண்டும் ஏற்படுத்த கோரி முறையீடு
ADDED : ஜூன் 11, 2024 06:07 AM
ஈரோடு : தமிழக ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் சண்முகம் தலைமையிலானோர், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கினர். பின் அவர் கூறியதாவது:
பவானி தாலுகா, பெரியபுலியூர் கிராமம், வளையக்காரபாளையத்தில் பூர்வீகமான, பாதுகாக்கப்பட்ட விளை நிலம் உள்ளது. வேறு சிலருக்கும் அதே பகுதியில் நிலம் உள்ளது. கோவில் நிலமும் தனியாக உள்ளது. இவ்விடங்களுக்கு செல்லும் வழிப்பாதையை, பல தலைமுறையாக பயன்படுத்தி வருகிறோம்.
தற்போது அவ்விடத்தை முறையாக அளவீடு செய்யாமல் தனி நபர்களுக்கு பட்டா போட்டு கொடுத்துள்ளனர். இதனால் அவ்வழியாக செல்ல முடியாமலும், விளை நிலம், பிற பயன்பாட்டுக்கான நிலங்களுக்கான பாதை அடைபட்டுள்ளது. இதுபற்றி விசாரித்து, வழித்தடப்பாதையை மீண்டும் ஏற்படுத்தி, பட்டா வழங்கியதை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு கூறினார்.