Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அம்மா உணவகத்தை கோபியில் தேடும் அவலம்

அம்மா உணவகத்தை கோபியில் தேடும் அவலம்

அம்மா உணவகத்தை கோபியில் தேடும் அவலம்

அம்மா உணவகத்தை கோபியில் தேடும் அவலம்

ADDED : ஆக 02, 2024 03:55 AM


Google News
கோபி: கோபியில், அம்மா உணவகத்தை தேடும் அவலம் ஏற்பட்டுள்-ளது.

மலிவு விலையில், தரமான உணவு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில், கோபி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், கோபி கச்சேரிமேட்டில், அரசு மருத்துவமனை சாலையில், 2015ல், அ.தி.மு.க., ஆட்சியில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அம்மா உணவகத்தை திறந்து வைத்தார். அங்கு தினமும் இட்லி ஒரு ரூபாய், சாம்பார் சாதம் ஐந்து ரூபாய், தயிர் சாதம் மூன்று ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஒன்பது ஆண்டுகளாக பயன்பாட்டில் இருக்கும், அம்மா உணவகத்தால் கோபி அரசு மருத்துவமனைக்கு வரும் நோயா-ளிகள் முதல், அங்கு வரும் அவரின் உறவினர்கள் வரை, பயன-டைந்து வருகின்றனர். அம்மா உணவகத்தின் முகப்பில், ஜெ., படத்துடன் கூடிய, அம்மா உணவகம் என்ற வாசகத்துடன் கூடிய பெயர் பலகை முன்பு மாட்டி வைக்கப்பட்டிருந்தது.

தற்போது அந்த பெயர் பலகை, திருப்பி வைக்கப்பட்டுள்ளதால், அம்மா உணவகம் இருப்பது தெரியாமல், சிலர் அதை தேடி அவ-தியுறுகின்றனர்.

இதுகுறித்து கோபி நகராட்சி சேர்மன் நாகராஜ் கூறுகையில், ''அம்மா உணவகத்தின் மீது, சிறப்பு கவனம் செலுத்த, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். லோக்சபா தேர்தல் நடத்தை விதியால், அந்த பெயர் பலகை திருப்பி வைக்கப்பட்டது. பழைய பெயர் பலகைக்கு பதிலாக, தற்போது அங்கு புதிய பெயர் பலகை வைக்க உத்தர

விடப்பட்டுள்ளது,''என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us