கோபி தாலுகாவில் கூடுதல் மழை பதிவு
கோபி தாலுகாவில் கூடுதல் மழை பதிவு
கோபி தாலுகாவில் கூடுதல் மழை பதிவு
ADDED : ஜூலை 09, 2024 02:42 AM
கோபி;கோபி தாலுகாவில் மாதந்தோறும் பெய்யும் சராசரி மழையளவு கணக்கிடப்பட்டுள்ளது.
அதன்படி நடப்பாண்டில் ஜனவரி மாதத்தில், ஒரு நாள் மட்டும், 5.2 மி.மீ., மழை பெய்துள்ளது. பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஒரு நாள் கூட மழை பெய்யவில்லை. மே மாதத்தில் எட்டு நாட்களில், 199 மி.மீ., மழை; ஜூனில் எட்டு நாட்களில், 125 மி.மீ., மழை பெய்துள்ளது. அதாவது நடப்பாண்டு துவங்கி ஆறு மாதத்தில், 330 மி.மீ., மழை பெய்துள்ளது. இந்த ஆறு மாதத்தில் சராசரி மழை அளவு, 237 மி.மீ., ஆகும். சராசரியை விட, 93 மி.மீ., மழை கூடுதலாக பெய்துள்ளது.