/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஏழு ஆண்டுகளாக திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் நவீன இறைச்சி கூடம் ஏழு ஆண்டுகளாக திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் நவீன இறைச்சி கூடம்
ஏழு ஆண்டுகளாக திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் நவீன இறைச்சி கூடம்
ஏழு ஆண்டுகளாக திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் நவீன இறைச்சி கூடம்
ஏழு ஆண்டுகளாக திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் நவீன இறைச்சி கூடம்
ADDED : ஜூலை 29, 2024 01:30 AM
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி, 15வது வார்டு வைராபாளையத்தில், 2016-17ல், 75 லட்சம் ரூபாய் மதிப்பில், நவீன அறுவைக்கூடம் கட்டி முடிக்கப்பட்டது. பணிகள் முடிந்து ஏழாண்டுகளான நிலையில், திறக்கப்படாமல் பூட்டிக் கிடக்கிறது. இதனால் சமூக விரோதிகள் மது அருந்து இடமாக மாறியுள்ளது. ஜன்னல் கண்-ணாடி உடைந்து காணப்படுவதோடு, கூடத்தை சுற்றி புதர் மண்டி, விஷ ஜந்துக்களின் வாழ்விடமாக மாறி இருக்கிறது.
இதனால், 75 லட்சம் ரூபாய் நிதி வீணடிக்கப்பட்டு, மாநகராட்சி நிர்வாகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இனியும் காலம் தாழ்த்தாமல், நவீன இறைச்சி அறுவைக்கூடத்தை, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை எழுந்துள்ளது.