/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ டி.என்.பாளையம் அருகேஆண் யானை மர்மச்சாவு டி.என்.பாளையம் அருகேஆண் யானை மர்மச்சாவு
டி.என்.பாளையம் அருகேஆண் யானை மர்மச்சாவு
டி.என்.பாளையம் அருகேஆண் யானை மர்மச்சாவு
டி.என்.பாளையம் அருகேஆண் யானை மர்மச்சாவு
ADDED : ஜூன் 19, 2024 02:15 AM
டி.என்.பாளையம்;அந்தியூர் வனச்சரக பகுதியில் வசிக்கும் யானைகள், இரை மற்றும் தண்ணீர் கிடைக்காதபோது, டி.என்.பாளையம் அருகே வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களுக்கு வருவது வழக்கம். இதனால் பயிர் சேதம் ஏற்பட்டதால், பெரும்பாலான விவசாயிகள், விவசாய நிலத்தை சுற்றி மின் வேலி அமைத்துள்ளனர். இதையும் யானைகள் சேதம் செய்து உள்ளே வந்ததால், ஒரு சிலர் மின் வேலியில் உயரழுத்த மின் இணைப்பு கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் டி.என்.பாளையம் அருகே கரும்பாறை பகுதியில், 20 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் யானை, மழை நீர் ஓடை குறுக்கே அமைக்கப்பட்டிருந்த, மின் வேலி பகுதியில் இறந்து கிடந்தது. அந்தியூர் வனத்துறை, கள்ளிப்பட்டி மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வில் ஈடுபட்டனர். மின்சாரம் தாக்கி யானை பலியானதா அல்லது வேறு காரணமா என்பது, உடற்கூறு பரிசோதனைக்குப் பிறகே தெரிய வரும் என்று, வனத்துறையினர் தெரிவித்தனர்.