ADDED : மார் 26, 2025 01:45 AM
மாநகரில் 7 ரவுடிகள் கைது
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் தொடர் குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வரும் ரவுடிகளின் மீது நடவடிக்கை எடுக்க, எஸ்.பி., ஜவகர் உத்தரவிட்டார். இதையடுத்து கொலை, கொலை முயற்சி, அடிதடி, போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டவர்களின் விவரங்களை போலீசார் சேகரித்தனர்.
இதன் அடிப்படையில் ஈரோடு சூரம்பட்டிவலசை சேர்ந்த தக்காளி விக்கி (எ) விக்னேஷ், அணைக்கட்டு பூபதி என்கிற பூபதி, ஸ்டோனிபாலம் பகுதி காளியப்பன், சரவணன் (எ) புறா சரவணன் ஆகியோரை, நேற்று முன்தினம் கைது செய்தனர். இதில் விக்னேஷ் மீது கொலை உள்பட ஒன்பது குற்ற வழக்குகள், பூபதி மீது அடிதடி உள்பட ஒன்பது குற்ற வழக்குகள், காளியப்பன் மீது அடிதடி வழக்கு, புறா சரவணன் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. வீரப்பன்சத்திரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட கோகுல்நாத் (எ) சொட்டை கார்த்தி, சந்திரபிரகாஷ் இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது கஞ்சா விற்பனை, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஈரோடு டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட மரப்பாலத்தை சேர்ந்த நிக்காத்தையும், 22, போலீசார் கைது செய்தனர். இவர் மீது கஞ்சா விற்பனை, அடிதடி என ஆறு வழக்கு உள்ளது.