/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஆடிட்டர் வீட்டில் திருடிய 3 பேர் கைது:90 பவுன் நகை, ரூ.19 லட்சம் மீட்பு ஆடிட்டர் வீட்டில் திருடிய 3 பேர் கைது:90 பவுன் நகை, ரூ.19 லட்சம் மீட்பு
ஆடிட்டர் வீட்டில் திருடிய 3 பேர் கைது:90 பவுன் நகை, ரூ.19 லட்சம் மீட்பு
ஆடிட்டர் வீட்டில் திருடிய 3 பேர் கைது:90 பவுன் நகை, ரூ.19 லட்சம் மீட்பு
ஆடிட்டர் வீட்டில் திருடிய 3 பேர் கைது:90 பவுன் நகை, ரூ.19 லட்சம் மீட்பு
ADDED : ஜூலை 09, 2024 02:34 AM
ஈரோடு;ஈரோட்டில் ஆடிட்டர் வீட்டில், 235 பவுன் நகை, 48 லட்சம் ரூபாய் திருட்டு போன வழக்கில், மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம், 90 பவுன் நகை, ௧௯ லட்சம் ரூபாய் ரொக்கம், ஒரு காரை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு, சூரம்பட்டி, என்.ஜி.ஜி.ஓ.காலனி ஏழாவது வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணி, 69; ஆடிட்டரான இவரது வீட்டில், கடந்த மாதம், ௮ம் தேதி இரவு, 235 பவுன் நகை, 48 லட்சம் ரூபாய் திருட்டு போனது. சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்த பழங்குற்றவாளி திருட்டில் ஈடுபட்டதை கண்டுபிடித்தனர். அவர் தப்பிய நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், ஆலப்பள்ளி ரோடு, திருமலை நகர் ரியல் எஸ்டேட் அதிபர் அருண்குமார், 36; வேலுார், குடியாத்தம்,மோடிகுப்பம், ஆர்.கொளப்பள்ளி மாரியம்மன் கோவில் தெரு சந்திரன் மகன் விக்னேஷ், 24, வெல்டிங் தொழிலாளி; ஈரோடு, திண்டல், காரப்பாறை, மெடிக்கல் நகரை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் சத்யன், 34, ஆடிட்டர் டிரைவர் என மூவரை கைது செய்தனர். 90 பவுன் நகை, 19 லட்சம் ரூபாய், கார் பெங்களூரில் மீட்கப்பட்டது.
இதுபற்றி போலீசார் கூறியதாவது: திருட்டில் ஈடுபட்ட நபர் வந்து சென்ற காரை 'சிசிடிவி' கேமரா வாயிலாக பின் தொடர்ந்தோம். மொபைல் டவரில் பதிவான எண்ணை கொண்டு திருட்டுக்கு உடந்தையாக இருந்த நபர்களை பிடித்துள்ளோம். திருட்டில் நேரடியாக ஈடுபட்ட நபர், மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்து தலைமறைவாகி உள்ளார். விரைவில் அவரை பிடிப்போம். இவ்வாறு கூறினர்.