Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ டாக்டர் வீட்டில் 219 பவுன் திருட்டு; போலீசார் உறுதி

டாக்டர் வீட்டில் 219 பவுன் திருட்டு; போலீசார் உறுதி

டாக்டர் வீட்டில் 219 பவுன் திருட்டு; போலீசார் உறுதி

டாக்டர் வீட்டில் 219 பவுன் திருட்டு; போலீசார் உறுதி

ADDED : ஆக 05, 2024 01:55 AM


Google News
ஈரோடு, ஈரோடு, சஞ்சய் நகர், ராணி வீதியை சேர்ந்த பிரபாத் மனைவி ராணி சுப்ரியா, 42; ஹோமியோபதி டாக்டர். இவரது தந்தை பழனிச்சாமி, பல் டாக்டர்.

கடந்த மாதம், ௩௧ம் தேதி இவர்களின் வீட்டில் திருட்டு போனது. வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், 219 பவுன் நகை, 55 ஆயிரம் திருட்டு போனதை, போலீசார் உறுதி செய்துள்ளனர். வீட்டில் பதிவான கைரேகை, பழங்குற்றவாளி கைரேகையுடன் ஒத்துப்போயுள்ளது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: டாக்டர் வீட்டில் கைவரிசை காட்டிய ஆசாமி, தனது பல்சர் பைக்கை, ஒரு ரயில்வே ஸ்டேஷன் டூவீலர் ஸ்டாண்டில் நிறுத்தி விட்டு தலைமறைவாகி உள்ளார். மொபைல்போன் எண்களை அடிப்படையாக கொண்டு ஆசாமியை தேடி வருகிறோம். கைவரிசை காட்டிய நபர்களை விரைவில் பிடிப்போம். இவ்வாறு போலீசார் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us