/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 108 ஆம்புலன்ஸிலேயே பிரசவம்பணியாளர்களுக்கு பரிசு வழங்கல் 108 ஆம்புலன்ஸிலேயே பிரசவம்பணியாளர்களுக்கு பரிசு வழங்கல்
108 ஆம்புலன்ஸிலேயே பிரசவம்பணியாளர்களுக்கு பரிசு வழங்கல்
108 ஆம்புலன்ஸிலேயே பிரசவம்பணியாளர்களுக்கு பரிசு வழங்கல்
108 ஆம்புலன்ஸிலேயே பிரசவம்பணியாளர்களுக்கு பரிசு வழங்கல்
ADDED : ஜூன் 23, 2024 02:39 AM
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில், 108 ஆம்புலன்ஸ் சேவை, 44 வாகனங்களில் வழங்கப்படுகிறது. அவசர கால மருத்துவ உதவியாளர், பைலட் எனப்படும் ஓட்டுனர் என, நுாற்றுக்கும் மேற்பட்டோர் பணி செய்கின்றனர்.
விபத்து, நெஞ்சுவலி, விஷ முறிவு மற்றும் பல்வேறு விதமான நோயாளிகளுக்கு வாகனத்திலேயே முதலுதவி சிகிச்சை அளித்து, மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர். குறிப்பாக கர்ப்பணிகளுக்கு ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே, பிரசவம் பார்க்கும் நிலையும் ஏற்படுகிறது.
இவ்வாறு முதலுதவி சிகிச்சை அளித்து சிறப்பாக செயல்பட்ட, அவசர கால மருத்துவ உதவியாளர் மகாதேவன், ஓட்டுனர் சனாவுல்லாவுக்கு, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை உறைவிட மருத்துவ அலுவலர் சசிரேகா, பாராட்டி பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட, 108 ஆம்புலன்ஸ் மாவட்ட மேலாளர்கள் கவின், அம்பிகாசன் பங்கேற்றனர்.