/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ இன்று 10ம் வகுப்பு தேர்வுதுவக்கம்; 25,920 பேர் தயார் இன்று 10ம் வகுப்பு தேர்வுதுவக்கம்; 25,920 பேர் தயார்
இன்று 10ம் வகுப்பு தேர்வுதுவக்கம்; 25,920 பேர் தயார்
இன்று 10ம் வகுப்பு தேர்வுதுவக்கம்; 25,920 பேர் தயார்
இன்று 10ம் வகுப்பு தேர்வுதுவக்கம்; 25,920 பேர் தயார்
ADDED : மார் 28, 2025 01:04 AM
இன்று 10ம் வகுப்பு தேர்வுதுவக்கம்; 25,920 பேர் தயார்
ஈரோடு:தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு இன்று தொடங்கி ஏப்.,15ல் நிறைவு பெறுகிறது. ஈரோடு மாவட்டத்தில், 353 பள்ளிகளை சேர்ந்த, 24,854 மாணவ, -மாணவியர், தனித்தேர்வராக, 1,066 பேர் என, 25,920 பேர் எழுதுகின்றனர்.
மொத்தம், 117 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள், விபத்தினால் பாதிப்படைந்த மாணவ-
மாணவிகள் தேர்வு எழுத வசதியாக ஸ்கிரைப்(சொல்வதை கேட்டு எழுதுபவர்கள்) 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வை கண்காணிக்கும் பணியில், 117 முதன்மை கண்காணிப்பாளர், தேர்வு அறை மற்றும் பிற பணிகளுக்கு, 1,500க்கும் மேற்பட்ட ஆசிரியர், ஆசிரியைகள் நியமிக்கப்பட்டுள்ளனர். முறைகேடுகளை தடுக்க பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்தாண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டம், தமிழக அளவில் ஏழாவது இடத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.