ADDED : அக் 05, 2025 12:54 AM
ஈரோடு, மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் ஒருங்கிணைப்பு குழுவினர், ஈரோடு தலைமை தபால் அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் சின்னுசாமி தலைமை வகித்தார். ஓய்வூதியர் அனைவருக்கும் நியாயமான ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
வீட்டு வசதி, போக்குவரத்து, மருத்துவ வசதிகளை உறுதி செய்ய வேண்டும். போக்குவரத்து ஊழியர், ஓய்வூதியர் பிரச்னைகளை உடனடியாக தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து துறை ஓய்வூதியர் கலந்து கொண்டனர்.


