ADDED : செப் 30, 2025 01:34 AM
பவானி :சித்தோடு அருகே பெருமாள்பாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன், 27; ஈரோடு தனியார் நிறுவன மார்க்கெட்டிங் ஊழியர். திருமணம் ஆகாதவர். வேறு வேலைக்கு செல்ல தாயிடம் பணம் கேட்டுள்ளார். பணம் ஏற்பாடு செய்து தருவதாக தாய் கூறிய நிலையில்,
தற்போது இல்லை என்று தெரிவித்துள்ளார். இதனால் மூன்று தினங்களுக்கு முன் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டார். பவானி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார். இதுகுறித்து சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.


