ADDED : ஜூன் 11, 2025 01:39 AM
ஈரோடு, ஈரோடு மாநகராட்சி காமராஜர் வீதி, என்.எம்.எஸ். காம்பவுண்ட்டில் டீக்கடை உள்ளது. உரிமையாளர் ராம் நேற்று மாலை, 5:10 மணிக்கு டீ போட காஸ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது கசிவு காரணமாக சிலிண்டரில் தீப்பிடித்தது.
அங்கிருந்த பொதுமக்கள் தீயை அணைக்க முயன்றும் முடியாத நிலை உருவானது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சென்ற ஈரோடு தீயணைப்பு துறையினர் சென்று, 15 நிமிடங்கள் போராடி சிலிண்டரில் வந்த தீயை அணைத்தனர்.