ADDED : ஜூன் 08, 2025 01:06 AM
சத்தியமங்கலம், கடம்பூரை அடுத்த செங்காட்டை சேர்ந்த கூலி தொழிலாளி பெருமாள் மகள் அழகுமணி, 22; அதே பகுதியில் மளிகை கடையில் வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. மகளை கண்டு பிடித்து தரக்கோரி, கடம்பூர் போலீசில் பெருமாள் புகாரளித்துள்ளார்.