ADDED : மார் 26, 2025 01:43 AM
பண்ணாரிகோவிலில்பூச்சாட்டு விழா
சத்தியமங்கலம்:தமிழக அளவில் பிரசித்தி பெற்ற ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் நடப்பாண்டு பூச்சாட்டு விழா நேற்று முன்தினம் இரவு நடந்தது.
இதை தொடர்ந்து பண்ணாரியம்மன் உற்சவர், சருகு மாரியம்மன், சப்பரத்தில் அலங்கரிக்கப்பட்டு கிராமங்களுக்கு வீதியுலா புறப்பட்டது.
சிக்கரசம்பாளையத்துக்கு நள்ளிரவில் சென்ற அம்மனுக்கு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வழிபட்டனர். அங்கிருந்து பல்வேறு இன்று கிராமங்களுக்கு திருவீதி புறப்பட்டது.