/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பங்களாப்புதுாரில்ஆக்கிரமிப்பு அகற்றம் பங்களாப்புதுாரில்ஆக்கிரமிப்பு அகற்றம்
பங்களாப்புதுாரில்ஆக்கிரமிப்பு அகற்றம்
பங்களாப்புதுாரில்ஆக்கிரமிப்பு அகற்றம்
பங்களாப்புதுாரில்ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : மார் 22, 2025 01:25 AM
பங்களாப்புதுாரில்ஆக்கிரமிப்பு அகற்றம்
டி.என்.பாளையம்:-டி.என்.பாளையம் ஒன்றியம் புஞ்சை துறையம்பாளையம் ஊராட்சி பங்களாப்புதுார் பிள்ளையார் கோவில் வீதியில் ஏழு வீட்டை சேர்ந்தவர்கள், புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்ததாக புகார் எழுந்தது. அளவீடு செய்யப்பட்டதில் ஆக்கிரமிப்பு உறுதியானதை தொடர்ந்து, வருவாய் துறையினர் ஏழு குடும்பத்தினருக்கும் நோட்டீஸ் அனுப்பி, ஆக்கிரமிப்புகளை அகற்ற அவகாசமும் தந்தனர்.
அவகாசம் முடிந்தும் அகற்றப்படாததால், வாணிப்புத்துார் நில வருவாய் ஆய்வாளர் ஜெயக்குமார் தலைமையிலான வருவாய் துறையினர், பங்களாப்புதுார் போலீசார் நேற்று சென்றனர். ஆக்கிரமித்து கட்டப்பட்ட குளியலறை, வீட்டு முன்பிருந்த வாசல், சுற்றுச்சுவர், சிமெண்ட் சீட் போட்டிருந்ததை, பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினர். காலை, ௧௧:௦௦ மணிக்கு தொடங்கிய பணி, மாலை, 4:௦௦ மணிக்கு முடிந்தது.