Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஊரக வளர்ச்சி அதிகாரி அலுவலகத்தில் அதிகாலை வரை நீடித்த விஜிலென்ஸ் சோதனை

ஊரக வளர்ச்சி அதிகாரி அலுவலகத்தில் அதிகாலை வரை நீடித்த விஜிலென்ஸ் சோதனை

ஊரக வளர்ச்சி அதிகாரி அலுவலகத்தில் அதிகாலை வரை நீடித்த விஜிலென்ஸ் சோதனை

ஊரக வளர்ச்சி அதிகாரி அலுவலகத்தில் அதிகாலை வரை நீடித்த விஜிலென்ஸ் சோதனை

ADDED : ஜூலை 06, 2024 08:48 AM


Google News
ஈரோடு : ஊரக வளர்ச்சி துறை அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை துவங்கிய லஞ்ச ஒழிப்புத்-துறை சோதனை, அதிகாலை வரை நீடித்தது.

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஐந்தாவது தளத்தில் ஊரக உள்ளாட்சி துறை செயல்படுகி-றது. இதன் உதவி செயற்பொறியாளராக மோகன்பாபு, 45, பணி செய்கிறார். ஈரோடு மாவட்டம் கோபி உதவி செயற்பொறியாளரான இவர், கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். பஞ்., பகுதிகளில் நடக்கும் சாலைப்பணி, கட்டு-மானம் உள்ளிட்ட பணிகளின் திட்டமிடல், தர ஆய்வு, சான்று வழங்குதல், பணத்தை விடுக்க கடிதம் வழங்குதல் போன்ற பணிகளை கவனித்து

வந்தார்.

இந்த பணிகளின் ஒவ்வொரு நிலைக்கும், உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஒப்புதல் பெற்று, அடுத்த கட்ட பணியை தொடர வேண்டும். இதற்காக ஒரு தொகை கமிஷன் பெறுவதாக லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாருக்கு புகார்கள் சென்றன. நேற்று முன்தினம் மாலை, 13 ஒப்பந்ததாரர் தங்களின் பணி விபரத்தை சமர்ப்-பித்து, ஒப்புதல் பெற்று, ஒரு தொகை கைமாறு-வதாக ஈரோடு ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. டி.எஸ்.பி., ராஜேஷ் தலைமையில், இன்ஸ்-பெக்டர் ஆறுமுகம் உட்பட ஏழு பேர் குழுவினர், மாலை, 6:00 மணிக்கு அலுவலகத்தில் நுழைந்து சோதனையை துவங்கினர்.

பிற பணியாளர்களிடம் பணம், பொருள் சிக்க-வில்லை. ஒரு அறையில் உதவி செயற்பொறி-யாளர் மோகன்பாபு மற்றும் ஒப்பந்ததாரர்கள் இருந்தனர். அங்கு ஒரு பையில், 10.40 லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர். மோகன்பாபுவிடம் இருந்து, 58 ஆயிரம் ரூபாயும் சிக்கியது. இதன்படி உதவி செயற்பொறியாளர் மோகன்பாபு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்-தனர். மற்ற அலுவலர்கள் அனைவரும் சோத-னைக்கு பின், வீட்டுக்கு செல்ல இரவு, 8:00 மணிக்கு அனுமதிக்கப்

பட்டனர்.

கடந்த பிப்., மாதம் முதல் கூடுதல் பொறுப்பாக கவனிக்கும் மோகன்பாபு, ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட நாளில் ஒப்பந்ததாரர்களை வரவ-ழைத்து, கமிஷனை வசூலித்து வந்த நிலையில், தற்போது சிக்கி கொண்டார். மாலை, 6:00 மணிக்கு துவங்கிய சோதனை அதிகாலை, 3:30 மணிக்கு நிறைவடைந்தது. துறை ரீதியாகவும், போலீஸ் தரப்பிலும் மோகன்பாபுவிடம் விசா-ரணை நடந்து வருவதாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us