Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 'நாத்திக அரசால் சீரழியும் தமிழக கோவில்கள்' ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி ஆவேசம்

'நாத்திக அரசால் சீரழியும் தமிழக கோவில்கள்' ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி ஆவேசம்

'நாத்திக அரசால் சீரழியும் தமிழக கோவில்கள்' ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி ஆவேசம்

'நாத்திக அரசால் சீரழியும் தமிழக கோவில்கள்' ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி ஆவேசம்

ADDED : ஜூலை 22, 2024 11:57 AM


Google News
ஈரோடு: மசூதி, சர்ச்சை சீரமைக்க கோடிக்கணக்கில், மக்கள் வரிப்பணத்தை தமிழக அரசு செலவிடுகிறது. ஆனால், கோவில்களை பராமரிக்க எதுவும் தருவதில்லை. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல ஆயிரம் கோவில்கள் இடிந்து சீரழிந்து வருகிறது. பல ஆயிரம் கோவில்களில் விளக்கு இல்லை, வழிபாடு இல்லை.

ஒரு கால பூஜை கூட நடப்பதில்லை. ஆனால் அரசு சார்பில் சர்ச், மசூதி ஊழியர்களுக்கு டூவீலர் தரப்படுகிறது. கோவில் ஊழியர்களுக்கு ஏதுமில்லை. நாகூர் சந்தன கூடு நடத்த, 45 கிலோ சந்தன மரம் இலவசம். ரம்ஜான் நோன்பு கஞ்சி கொடுக்க, 70 லட்சம் கிலோ அரிசி இலவசம். ஆனால், ஆடி மாத அம்மனுக்கு கூழ் ஊற்ற அரசு எதுவும் தருவதில்லை. இந்து கோவில் திருவிழாவுக்கு கூடுதல் கட்டணத்துடன் அரசு பஸ்கள். ஆனால், முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரை செல்ல நபருக்கு, 12 ஆயிரம் ரூபாயில் இருந்து, 25 ஆயிரம் ரூபாயாக மானியத்தை அரசு உயர்த்தி வழங்கியுள்ளது.

கோவில்களில் கட்டண கொள்ளை அடிக்கப்படுகிறது. தமிழகத்தில் தமிழர்கள்

பண்பாடு, கலாசாரத்தின் மையமாக விளங்கும் கோவில்களை, நாத்திக ஹிந்து விரோத அரசு தொடர்ந்து சீரழித்து வருகிறது. எனவே கோவிலை விட்டு வெளியேறு என்ற முழுக்கத்துடன், ஈரோட்டில் இந்து முன்னணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் பெண்கள் உள்பட நுாற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மாநகர் மாவட்ட பொது செயலாளர் கார்த்தி தலைமை வகித்தார். கோவை கோட்ட செயலாளர் பாபா கிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். அனுமதி பெறாமல் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ததாக, அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us