ADDED : ஜூலை 10, 2024 02:56 AM
கொடுமுடி:தென்மேற்கு
பருவமழையை முன்னிட்டு, கொடுமுடி தீயணைப்பு நிலையம் சார்பில்,
கொடுமுடி காவிரி ஆற்றில் போலி ஒத்திகை பயிற்சி நேற்று நடந்தது.
தாசில்தார் பாலமுருகாயி தலைமை வகித்தார். தீயணைப்பு நிலைய பொறுப்பு
அலுவலர் மலைக்கொழுந்து தலைமை வகித்தார்.
வெள்ளப்பெருக்கில்
சிக்கியவரை மீட்பது, நீரில் மூழ்கி விடாமல் தப்பிப்பது என்பது
குறித்து தீயணப்பு வீரர்கள், செயல் விளக்கம் அளித்தனர். வெள்ளத்தில்
சிக்கியவர்களை மீட்டு, முதலுதவி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு
பேரிடர் தடுப்பு ஒத்திகை பயிற்சிகளை செய்து காட்டினர்.
இதை
நுாற்றுக்கணக்கான மக்கள் நேரில் பார்த்தனர். இதேபோல் அந்தியூர் அருகே
அத்தாணியில், அந்தியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், பவானி ஆற்றில்,
போலி ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர்.