/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அண்ணாமலையை கண்டித்து காங்., கட்சியினர் மறியல் அண்ணாமலையை கண்டித்து காங்., கட்சியினர் மறியல்
அண்ணாமலையை கண்டித்து காங்., கட்சியினர் மறியல்
அண்ணாமலையை கண்டித்து காங்., கட்சியினர் மறியல்
அண்ணாமலையை கண்டித்து காங்., கட்சியினர் மறியல்
ADDED : ஜூலை 12, 2024 01:41 AM
பெருந்துறை,
தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகையை தரக் குறைவாக விமர்சனம் செய்ததாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையை கண்டித்து, ஈரோடு தெற்கு மாவட்ட காங்., சார்பில், பெருந்துறையில் சாலை மறியல் மற்றும் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நேற்று நடந்தது.
தலைவர் மக்கள் ராஜன் தலைமை வகித்தார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ., பழனிசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்ரமணியம், வட்டார தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். உருவ பொம்மையை எரிக்க முயன்ற, 39 பேரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.