Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 'ஸ்டார்ட் அப்' தொழில் முனைவோர்களுக்கு வங்கி மானியம்

'ஸ்டார்ட் அப்' தொழில் முனைவோர்களுக்கு வங்கி மானியம்

'ஸ்டார்ட் அப்' தொழில் முனைவோர்களுக்கு வங்கி மானியம்

'ஸ்டார்ட் அப்' தொழில் முனைவோர்களுக்கு வங்கி மானியம்

ADDED : ஜூன் 13, 2024 07:25 AM


Google News
ஈரோடு : ஈரோடு பெருந்துறை கொங்கு இன்ஜினியரிங் கல்லுாரி வளாகத்தில், கொங்கு தொழில் நுட்ப வணிக காப்பகம் டி.பி.ஐ. இன்குபேட்டர் இயங்கி வருகிறது.

'ஸ்டார்ட் அப்' தொழில்கள் தொடங்கும் இளம் தொழில் மத்திய முனைவோர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இது செயல்படுகிறது. நாடு முழுவதும் இதுபோல், 41 இன்குபேட்டர்கள் உள்ளன. இந்த மையங்களில் இருந்து, புதிய தொழில் முனைவோர்களுக்கு வங்கிகள் மூலம் மானியம் வழங்கப்படுகிறது.

குறிப்பாக விவசாய தொழில் நுட்பம், நிலையான கிராமப்புற பொருளாதாரம் மற்றும் சமூக தாக்கங்களை ஊக்குவிக்கும் 'ஸ்டார்ட்அப்' நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

அதன்படி, பெருந்துறை கொங்கு தொழில்நுட்ப வணிக காப்பகத்தில் பதிவு செய்து, 'ஸ்டார்ட் அப்' தொழில் தொடங்கி இருக்கும், 4 நிறுவனங்களை எச்.டி.எப்.சி. வங்கி தனது ஸ்டார்ட் அப் மானிய திட்டத்துக்கு தேர்வு செய்து உள்ளது. இதுதொடர்பான நிகழ்ச்சியில் கொங்கு இன்ஜினியரிங் கல்லுாரி தாளாளர் இளங்கோ, எச்.டி.எப்.சி. வங்கி சேலம் வட்டத்தலைவர் சந்தோஷ் மேனன் ஆகியோர் மானியம் வழங்குவதற்கான உத்தரவை வழங்கினர்.

கல்லுாரி முதல்வர் பாலுசாமி, மைய பொறுப்பு அதிகாரி பரமேஸ்வரன், வங்கியின் ஈரோடு குழும தலைவர் கோபிநாத்,

பெருந்துறை கிளை மேலாளர் அசோக்குமார், மக்கள் தொடர்பு மேலாளர் சந்தோஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us