ADDED : மார் 13, 2025 02:02 AM
தேனீக்கள் கடித்து5 பேர் காயம்
தாராபுரம்:திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ஈஸ்வரன் கோவில் அருகே அமராவதி ஆற்றங்கரையில், நேற்று மதியம் 12:30 மணியளவில் கூட்டமாக வந்த தேனீக்கள், அவ்வழியே சென்றவர்களை விரட்டியது. இதனால் பொதுமக்கள் ஓட்டம் பிடித்தனர். இருப்பினும், தேனீக்கள் கடித்ததில் தாராபுரத்தை சேர்ந்த தர்மராஜ், 65, மோகன்ராஜ், 60, சிராஜுதீன், 65, உள்பட ஐந்து பேர் காயமடைந்து, தாராபுரம் அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.