ADDED : ஜூலை 02, 2025 01:37 AM
டி.என்.பாளையம் டி.என்.பாளையம் அருகே கள்ளிப்பட்டி சஞ்சய்காந்தி வீதியை சேர்ந்தவர் கார்த்திக், 31; கட்டட தொழிலாளி. அடசபாளையத்தை சேர்ந்தவர் தனஸ்ரீ, 23; இருவரும் ஒன்றரை ஆண்டுகளாக காதலித்தனர்.
ஒரே தரப்பினர் என்றாலும், பெண் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். இருவரும் கள்ளிப்பட்டியில் ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டு, பாதுகாப்பு கேட்டு பங்களாபுதுார் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று தஞ்சமடைந்தனர்.
இருவரின் பெற்றோரிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, கார்த்திக் பெற்றோருடன் காதல் தம்பதியை அனுப்பி வைத்தனர்.