Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 50 சதவீத மானியத்தில் விவசாயிகள் தக்கை பூண்டு விதை பெற யோசனை

50 சதவீத மானியத்தில் விவசாயிகள் தக்கை பூண்டு விதை பெற யோசனை

50 சதவீத மானியத்தில் விவசாயிகள் தக்கை பூண்டு விதை பெற யோசனை

50 சதவீத மானியத்தில் விவசாயிகள் தக்கை பூண்டு விதை பெற யோசனை

ADDED : ஜூலை 04, 2024 07:21 AM


Google News
ஈரோடு: முதல்வரின், மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்-டத்தில், 50 சதவீத மானியத்தில் தக்கை பூண்டு விதைகள் பெறலாம்.

இது குறித்து ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை வேளாண் உதவி இயக்குனர் ஜெயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை:

அம்மாபேட்டை வட்டாரத்தில், சம்பா பருவ நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள், தரிசாக உள்ள தங்கள் நிலத்தில் மழையை பயன்படுத்தி, உழவு செய்து, பசுந்தாள் உர பயிர் தக்கை பூண்டு விதைகளை விதைக்கலாம். பசுந்தாள் பயிர் சாகுபடிக்கு ஒரு ஏக்க-ருக்கு, 20 கிலோ பசுந்தாள் விதைகளை விதைக்க வேண்டும். நன்கு வளர்ந்தவுடன், 45 நாட்களில் பூ பூக்கும் தருணத்தில் பசுந்தாள் உர பயிர்களை மடக்கி உழ வேண்டும். பசுந்தாள் உர பயிர்கள், வளி மண்டலத்தின் நைட்ரஜனை வேர் முடிச்சுகளில் உள்ள, ரைசோபியம் என்ற நுண்ணுயிர்களின் துணையுடன் நிலை நிறுத்தும். வயலில் அங்கக சத்து அதிகரிக்கும். மண்ணின் நுண்-ணுயிர் பெருக்கம் அதிகமாகி, மண் வளம் மேம்படும். மண்ணில் வாழும் நுண்ணுயிர்களுக்கு உணவாக, நாம் பயிரிட்டு மடக்கி உழும் பசுந்தாள் உரப்பயிர்கள் பயன்படுகிறது. தற்போது, 50 சத-வீத மானியத்தில் தக்கை பூண்டு விதைகள் அம்மாபேட்டை வட்-டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் ஒல-கடம், சனிச்சந்தை துணை வேளாண் விரிவாக்க மையங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us