Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கொமாரபாளையம் பஞ்., தலைவர் மீது குற்றச்சாட்டு

கொமாரபாளையம் பஞ்., தலைவர் மீது குற்றச்சாட்டு

கொமாரபாளையம் பஞ்., தலைவர் மீது குற்றச்சாட்டு

கொமாரபாளையம் பஞ்., தலைவர் மீது குற்றச்சாட்டு

ADDED : ஜூலை 02, 2024 07:20 AM


Google News
ஈரோடு : சத்தியமங்கலம் தாலுகா கொமாரபாளையம், தாசரிபாளையத்தை சேர்ந்த ருக்மணி உட்பட சிலர், கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு வழங்கி கூறியதாவது:

கொமாரபாளையம் பஞ்சாயத்தில் கடந்த, 15 ஆண்டுகளாக கோழிக்கடையை ஏலத்தில் எடுத்து நடத்தி வருகிறேன். கடந்-தாண்டு பஞ்., தலைவர் சரவணன், செயலர் ஆகியோர், ஒரு லட்சம் ரூபாய் தொகை கேட்டனர். நானும் பணம் தந்து விட்டு, அதற்கான ரசீதை கேட்டேன். தொலைந்து விட்டதாக கூறினர். நடப்பாண்டும் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தேன். தற்போதும் ரசீது தரவில்லை. கடந்த ஏப்., மாதம், 61,846 ரூபாய்க்கு ரசீது வழங்கினர். இதுபற்றி கேட்டதால், பஞ்., தலைவர் கோபம-டைந்தார்.

இந்நிலையில் வேறு ஒருவருக்கு, 6,000 ரூபாய் மட்டும் ஏலத்தில் வழங்கியதாக கூறி, அவருக்கும் ரசீது வழங்கி கணக்கு காட்டியுள்-ளனர். பஞ்சாயத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், தவறாக ஏலத்தை நடத்தியது குறித்து, கலெக்டர் விசாரிக்க வேண்டும். முறையாக பணம் செலுத்திய எனக்கு கோழிக்கடை நடத்த உரிமம் வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்-துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us