/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்
தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்
தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்
தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 20, 2024 07:15 AM
ஈரோடு : மலக்குழியில் இறங்குதல், விஷ வாயு மரணங்களை தடுக்க கோரி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. உயர் கல்வி நிறுவனங்களில் துப்புரவு பொறியியல் துறையை உருவாக்க வேண்டும். மலக்கு-ழியில் இறங்கி பணி செய்தல், அங்கு விஷ வாயு தாக்கி நடக்கும் மரணங்களை தடுக்க மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும். துாய்மை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள
தொழிலாளர்களின் மறு-வாழ்வை உறுதிப்படுத்த வலியுறுத்தி கோஷமிட்டனர். மாவட்ட தலைவர் பழனிசாமி, பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் வீர-வேந்தன், சிந்தனைசெல்வன், சண்முகம், அறிவழகன், நிலவன், வேலு, ஸ்ரீராம் உட்பட பலர் பங்கேற்றனர்.