/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/குழந்தைகள் பூங்காவில் சிக்கிய 6 பாம்புகள்குழந்தைகள் பூங்காவில் சிக்கிய 6 பாம்புகள்
குழந்தைகள் பூங்காவில் சிக்கிய 6 பாம்புகள்
குழந்தைகள் பூங்காவில் சிக்கிய 6 பாம்புகள்
குழந்தைகள் பூங்காவில் சிக்கிய 6 பாம்புகள்
ADDED : ஜூன் 22, 2024 02:40 AM
ஈரோடு:ஈரோடு
வ.உ.சி., பூங்கா வளாகத்தில் குழந்தைகளுக்கான பூங்கா தனியாக உள்ளது.
அவ்வளாகம் முழுவதும் புல் தரை, அழகிய பூக்களுடன் செடி, மரம் உள்ளன.
குழந்தைகள் விளையாட ஊஞ்சல் உள்பட பல்வேறு விளையாட்டு உபகரணங்கள்,
அமைப்புகள் உள்ளன.
இங்கு தினமும், 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் வந்து
செல்வார்கள். சமீபமாக பூங்காவில் பாம்பு நடமாட்டம் அதிகமானது.
பூங்காவின் எதிர்புறம் உள்ள பெரியவர்களுக்கான பிரமாண்ட பூங்கா
புதர் மண்டி கிடப்பதால், அங்கிருந்து பாம்பு வந்து செல்வது சகஜானது.
அதேசமயம் குழந்தைகள் அச்சம் அடைந்தனர். இந்நிலையில் ஈரோடு பாம்பு
பிடிக்கும் வீரர் முருகன், பூங்காவுக்கு நேற்று சென்றார். கட்டு விரியன்
பாம்பு, ஓணான் தலை பாம்பு, 'குக்ரிஸ் நெக்' என்ற வகை பாம்பு என, ஆறு
பாம்புகளை நேற்று பிடித்தார். இவை வனத்துறை அலுவலகத்தில்
ஒப்படைக்கப்பட்டன.