/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தன்னார்வலர்கள் சார்பில் 30வது ஆண்டாக சேவை

தன்னார்வலர்கள் சார்பில் 30வது ஆண்டாக சேவை

தன்னார்வலர்கள் சார்பில் 30வது ஆண்டாக சேவை

தன்னார்வலர்கள் சார்பில் 30வது ஆண்டாக சேவை

தன்னார்வலர்கள் சார்பில் 30வது ஆண்டாக சேவை

ADDED : பிப் 12, 2025 01:08 AM

Google News
தன்னார்வலர்கள் சார்பில் 30வது ஆண்டாக சேவை

காங்கேயம்,:காங்கேயத்தை அடுத்த சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில், தைப்பூச தேர் திருவிழா கடந்த, 2ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. நேற்று தேரோட்டம் துவங்கிய நிலையில், நேற்று காலை முதல் திருப்பூர், காங்கேயம், தாராபுரம், சென்னிமலை, ஈரோடு மற்றும் பல பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

பகலில் வெயில் தாக்கம் அதிகமாக உள்ளதால், மக்களுக்கு தாகம் தீர்க்கும் வகையில் காவடிக்குழு சார்பிலும், தன்னார்வலர் சார்பிலும் நீர்மோர் பந்தல் அமைத்து சேவை செய்கின்றனர். சிவன்மலையை சேர்ந்த தளபதி குரூப் தன்னார்வலர்கள், 30வது ஆண்டாக நீர்மோர் வழங்கி மக்களின் தாகத்தை தீர்த்து வருகின்றனர்.