Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ திருப்பூர் மாவட்டத்தில் 10 தாசில்தார் இடமாற்றம்

திருப்பூர் மாவட்டத்தில் 10 தாசில்தார் இடமாற்றம்

திருப்பூர் மாவட்டத்தில் 10 தாசில்தார் இடமாற்றம்


ADDED : பிப் 05, 2025 01:16 AM

Follow on Google

ADDED : பிப் 05, 2025 01:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர் மாவட்டத்தில் 10 தாசில்தார் இடமாற்றம்

திருப்பூர், : திருப்பூர் மாவட்டத்தில், தாசில்தார் நிலையிலான பத்து பேரை பணியிட மாறுதல் செய்து, கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளார். அதன் விபரம்:

கலெக்டர் அலுவலக மேலாளர் (குற்றவியல்) சரவணன், திருப்பூர் தெற்கு தாசில்தாராகவும், அங்கு பணிபுரியும் மயில்சாமி, கலெக்டர் அலுவலக மேலாளராகவும், கலெக்டர் அலுவலக மேலாளர் (பொது) ஜெயசிங் சிவக்குமார், கோட்ட கலால் அலுவலராகவும்; அங்கு பணிபுரியும் ராகவி, மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளராகவும் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பூர் வடக்கு தாசில்தார் மகேஸ்வரன், கலெக்டர் அலுவலக மேலாளராகவும் (பொது), கலால் உதவி கமிஷனர் அலுவலக முன்னாள் அலுவலக மேலாளர் ராமலிங்கம், மீண்டும் அதே பணியிடத்துக்கும், முத்திரைத்தாள் தனி தாசில்தார் பாபு, வாணிப கழக கிடங்கு மேலாளராகவும், அங்கு பணிபுரியும் ஜெகதீஸ்குமார், முத்திரைத்தாள் தனி தாசில்தாராகவும் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் கவுரி சங்கர், உடுமலை தாசில்தாராகவும், மடத்துக்குளம் தாசில்தார் பானுமதி, கலெக்டர் அலுவலக பேரிடர் மேலாண்மை பிரிவு தனி தாசில்தாராகவும் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

தற்காலிக பதவி உயர்வுதுணை தாசில்தார் மூவருக்கு, தாசில்தாராக தற்காலிக பதவி உயர்வு வழங்கி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அவ்வகையில், காங்கேயம் வாணிப கிடங்கு உதவி மேலாளர் கதிர்வேல், திருப்பூர் வடக்கு தாசில்தாராகவும், கலெக்டர் அலுவலக துணை தாசில்தார் குணசேகரன், மடத்துக்குளம் தாசில்தாராகவும், 'ஓ' பிரிவு தலைமை உதவியாளர் சபரிகிரி,

பல்லடம் தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us