ADDED : மார் 27, 2025 01:37 AM
பண்ணாரி அம்மன் சப்பரம் ஊர்வலம்
சத்தியமங்கலம்:சத்தியமங்கலத்தை அடுத்த பிரசித்தி பெற்ற பண்ணாரியம்மன் கோவிலில் நடப்பாண்டு குண்டம் விழா பூச்சாட்டுதலை தொடர்ந்து, பண்ணாரி அம்மன் உற்சவர், 25ம் தேதி முதல் சுற்று வட்டார பகுதி கிராமங்களுக்கு உலாவாக கொண்டு செல்லப்படுகிறது. நேற்றிரவு இக்கரை நெகமம் கிராமத்தில் உலா சென்றது. இன்று வெள்ளியம்பாளையம், இக்கரை தத்தபள்ளி கிராமங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.