ADDED : மார் 23, 2025 01:34 AM
நீர்-மோர் பந்தல் திறப்பு
தாராபுரம்:கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், தாராபுரம் பஸ் ஸ்டாண்டில் நகராட்சி சார்பில் நேற்று மாலை நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. நகர்மன்ற தலைவர் பாப்புகண்ணன், நகர தி.மு.க., செயலாளர் முருகானந்தம் உள்பட பலர் பங்கேற்றனர். பஸ் ஸ்டாண்டில்
பயணிகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு தர்பூசணி துண்டு, மோர் வழங்கப்பட்டது.