ADDED : ஜூன் 20, 2024 06:29 AM
ஈரோடு : ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில், தி ரேடியோலாஜிக்கல் அசிஸ்டெண்ட்ஸ் அசோசியேசன் சார்பில் மாவட்ட செயலாளர் விஜயகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.இப்பணியில் உள்ளோருக்கு, ஐந்தரை மணி நேரமாக இருந்த பணி நேரத்தை, 8 மணி நேரமாக அதிகரித்து உத்தரவிட்டதை ரத்து செய்து, பழைய நேரத்தின்படியே வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என நலப்பணிகள் இணை இயக்குனரிடம் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அரசு ஊழியர் சங்க மாநில துணை பொதுச் செயலாளர் சீனிவாசன், மாவட்ட செயலாளர் விஜயமனோகரன், செவிலியர் மேம்பாட்டு சங்க மாநில தலைவர் சசிகலா, எட்வின் பிரசாத் உட்பட பலர் பங்கேற்றனர்.