/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சத்துணவு திட்டம் குறித்து சிறப்பு சபை கூட்டம் சத்துணவு திட்டம் குறித்து சிறப்பு சபை கூட்டம்
சத்துணவு திட்டம் குறித்து சிறப்பு சபை கூட்டம்
சத்துணவு திட்டம் குறித்து சிறப்பு சபை கூட்டம்
சத்துணவு திட்டம் குறித்து சிறப்பு சபை கூட்டம்
ADDED : ஜூலை 06, 2024 07:06 AM
ஈரோடு : தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவு உள்ள குறைபாடுகளை கண்டறிந்து நிவர்த்தி செய்யவும், திட்-டத்தை மேம்படுத்தவும், சத்துணவு மையங்களை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, 38 மாவட்டங்களில், தேர்வு செய்யப்பட்ட, 954 சத்துணவு மையங்களில் சமூக தணிக்கை அலகு சார்பில் இரு கட்டங்களாக ஆய்வு நடத்த முடிவு செய்-தனர். இதில் முதல் கட்ட ஆய்வு கடந்த, 1-ம் தேதி தொடங்கி நேற்று வரை நடந்தது.
ஈரோடு இடையன்காட்டுவலசு மாநகராட்சி உயர்நிலை பள்-ளியில் தணிக்கை குழுவினர் ஆய்வு நடத்தினர். இதை தொடர்ந்து சிறப்பு சபை கூட்டம் பள்ளியில் நேற்று மாலை நடந்-தது. இதில் தணிக்கை குழு அலுவலர்கள், மாநகராட்சி அதிகா-ரிகள் பங்கேற்றனர். இரண்டா-ம் கட்ட ஆய்வு, ௮ம் தேதி தொடங்கி, 12ம் தேதி வரை நடக்கிறது.