ADDED : ஜூலை 06, 2024 12:16 AM
சத்தியமங்கலம் : சத்தியமங்கலத்தில் பவானி ஆற்றங்கரையோரம் வரசித்தி விநா-யகர் கோவில் உள்ளது.
இங்கு வரும், 12ம் தேதி கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை பூசாரி கோபால் பூஜைக்கான பணி-களில் ஈடுபட்டிருந்தார். அப்போது வந்த வீரமணி, ராமகி-ருஷ்ணன் ஆகியோர், சிலை வைக்கும் பீடங்களை சுத்தியலால் உடைத்து விட்டு பூசாரிக்கு கொலை மிரட்டல் விடுத்து ஓட்டம் பிடித்தனர். சத்தி போலீசார் வழக்குப்பதிந்து இருவரையும் தேடி வருகின்றனர்.