Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரூ.2.40 லட்சம் லஞ்சம் வாங்கியபோது ஊராட்சி தலைவர் உள்பட 3 பேர் கைது

ரூ.2.40 லட்சம் லஞ்சம் வாங்கியபோது ஊராட்சி தலைவர் உள்பட 3 பேர் கைது

ரூ.2.40 லட்சம் லஞ்சம் வாங்கியபோது ஊராட்சி தலைவர் உள்பட 3 பேர் கைது

ரூ.2.40 லட்சம் லஞ்சம் வாங்கியபோது ஊராட்சி தலைவர் உள்பட 3 பேர் கைது

ADDED : ஜூலை 30, 2024 05:25 AM


Google News
பு.புளியம்பட்டி: குடிநீர் குழாய் பதிக்க, விவசாயிகளிடம் லஞ்சம் பெற்ற, ஊராட்சி தலைவர், துணை த்தலைவர், செயலர் என மூன்று பேரை, ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகேயுள்ள கொத்தமங்க-லத்தை சேர்ந்த விவசாயிகள் கனகராஜ், ரவிச்சந்திரன். இருவரும் தங்கள் விவசாய தோட்டத்தில் குடிநீர் குழாய் பதிக்க, கொத்தமங்-கலம் ஊராட்சி அலுவலகத்தில் தடையில்லா சான்று கேட்டு விண்ணப்பித்தனர். ஒரு மாதமாகியும் அனுமதி கிடைக்க-வில்லை.

இதற்கிடையே குடிநீர் குழாய் பதிக்க ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி தடையில்லா சான்று வழங்க, அ.திமு.க.,வை சேர்ந்த ஊராட்சி தலைவர் மல்லிகா, துணைத்தலைவர் சண்-முகம், ஊராட்சி செயலர் ராஜு ஆகியோர், 2.40 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர். இதுகுறித்து இருவரும் ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தனர். அவர்கள் திட்டப்படி இருவரும் கொத்தமங்கலம் ஊராட்சி அலு-வலகத்துக்கு நேற்று சென்றனர். ரசாயனம் தடவி ரூபாய் நோட்டு-களை தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி செயலரிடம் லஞ்ச-மாக கொடுத்தனர். பணத்தை பெற்ற மூவரையும் வளாகத்தில் மறைந்திருந்த ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., ராஜேஷ், இன்ஸ்பெக்டர் ரேகா தலைமையிலான போலீசார் கையும் களவு-மாக பிடித்தனர். மூவரையும் கைது செய்து, தீவிர விசாரணை நடத்தினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us