Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சட்டவிரோத மின்பாதை அமைப்புஎஸ்.பி.,யிடம் விவசாயிகள் புகார்

சட்டவிரோத மின்பாதை அமைப்புஎஸ்.பி.,யிடம் விவசாயிகள் புகார்

சட்டவிரோத மின்பாதை அமைப்புஎஸ்.பி.,யிடம் விவசாயிகள் புகார்

சட்டவிரோத மின்பாதை அமைப்புஎஸ்.பி.,யிடம் விவசாயிகள் புகார்

ADDED : மார் 27, 2025 01:58 AM


Google News
சட்டவிரோத மின்பாதை அமைப்புஎஸ்.பி.,யிடம் விவசாயிகள் புகார்

திருப்பூர்,௭காங்கயம், தாராபுரத்தில் சட்டவிரோதமாக மின்பாதை அமைக்கும் பணி நடப்பதாக விவசாயிகள் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதுதொடர்பாக விவசாயிகள், எஸ்.பி., கிரிஷ் அசோக் யாதவிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

தாராபுரம், காங்கயம் தாலுகாவில் தனியார் பெரு நிறுவனங்கள் காற்றாலை அமைத்து, மின் உற்பத்தி செய்து வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ளது. அவ்வாறு அமைக்கப்படும் காற்றாலைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தங்களது சொந்த துணை மின் நிலையங்களுக்கு எடுத்து செல்ல, கிராம சாலைகள் மற்றும் நெடுஞ்சாலை துறை சாலைகளில், 33 கே.வி., மின் பாதை அமைக்க திட்டமிட்டுள்ளன. இதுதொடர்பாக அரசிடம் முறையாக அனுமதி பெறவில்லை. கிராம ஊராட்சிகளிலும் தீர்மானங்கள் மூலம் அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை. நெடுஞ்சாலைத்துறை இடங்களில் அமைக்கப்படும் மின் பாதைகளுக்கு, எவ்வித விதிகளையும், நிபந்தனைகளையும் கடைபிடிப்பதில்லை. இதுதொடர்பாக தாராபுரம் தாலுகா அலுவலகத்தில் கடந்த, 12ம் தேதி பேச்சு நடந்தது. காங்கயத்தில், 14ம் தேதி நடந்தது. தவறான தகவல், ஆவணங்கள் தயாரித்து அரசிடம் சமர்ப்பித்து முறைகேடு செய்துள்ளனர். கிராமத்தின் பசுமையை அழிக்கும் வகையில் சட்டவிரோதமாக மின்பாதை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. அவற்றை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us