ADDED : மார் 25, 2025 12:50 AM
தாளவாடி அருகே தீ மிதி விழா
சத்தியமங்கலம்:தாளவாடி அருகே நெய்தாளபுரம் தொட்டம்தாய் அம்மன் கோவிலில், நடப்பாண்டு குண்டம் விழா நேற்று நடந்தது. விழாவில் கோவில் பூசாரி மட்டுமே தீ மிதித்தார். இதன்படி பூசாரி சிக்கமாதப்பா, குண்டம் இறங்கினார். இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, பூஜை நடந்தது. விழாவில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த, 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.