/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பெருந்துறை மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் பெருந்துறை மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்
பெருந்துறை மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்
பெருந்துறை மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்
பெருந்துறை மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்
ADDED : ஜூலை 06, 2024 06:10 AM
பெருந்துறை : சிப்காட்டில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி, மக்கள் உள்ளிருப்பு போராட்டம் மேற்கொண்டனர்.
சிப்காட்டில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில், நேரடி கலந்தாய்வு அமர்வு, ஒவ்வொரு மாதமும், 5ம் தேதி காலை, 11:௦௦ மணி முதல் மதியம், 1:௦௦ மணி வரை நடக்கும். லோக்சபா தேர்தல் நடத்தை விதியால் மூன்று மாதங்களாக கூட்டம் நடக்கவில்லை.
தேர்தல் நடத்தை விதி வாபசான நிலையில், வழக்கமான மாதாந்திர குறை கேட்பு கூட்டம் நேற்று நடப்பதாக அறிவிக்கப்-பட்டது. இதனால் ஆண்கள், பெண்கள் என நுாற்றுக்கும் மேற்-பட்டோர் அலுவலகத்துக்கு வந்தனர். கூட்டம் நடக்கும் அரங்கு, வாரிய அலுவலகமாக மாற்றப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்-தனர்.
இதனால் மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட அதிகாரி சாமிநா-தனை சந்தித்து, குறைகளை தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டது. இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: குறை கேட்பு கூட்டம் நடக்கும் அரங்கை, அலுவலகமாக மாற்றி விட்டனர். எங்கள் குறைகளை அதிகாரிகள் கவனத்துக்கு எப்படி சொல்வது? உடன-டியாக குறைதீர் கூட்டரங்கை ஏற்படுத்தி, மக்களை அழைத்து குறை கேட்க வேண்டும். கோரிக்கை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும். இவ்வாறு கூறினர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட, ௫ பெண்கள் உட்பட, ௪௩ பேரை பெருந்துறை போலீசார் கைது செய்தனர்.