/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ விதை மஞ்சள் ரூ.70க்கு விற்பனை இருப்பு குறைவால் விலை உயர்வு விதை மஞ்சள் ரூ.70க்கு விற்பனை இருப்பு குறைவால் விலை உயர்வு
விதை மஞ்சள் ரூ.70க்கு விற்பனை இருப்பு குறைவால் விலை உயர்வு
விதை மஞ்சள் ரூ.70க்கு விற்பனை இருப்பு குறைவால் விலை உயர்வு
விதை மஞ்சள் ரூ.70க்கு விற்பனை இருப்பு குறைவால் விலை உயர்வு
ADDED : ஜூலை 03, 2024 09:06 AM
ஈரோடு, : ஈரோட்டில் விதை மஞ்சள் இருப்பு குறைவாக உள்ளதால், கிலோ, 70 ரூபாய்க்கு விற்கப்படுகி-றது.
ஈரோடு மாவட்டத்தில் கொடுமுடி, சிவகிரி, மொடக்குறிச்சி, அந்தியூர், தாளவாடி உட்பட சில பகுதிகளில், 7,000 ஏக்கருக்கு மேல் மஞ்சள் சாகு-படி செய்யப்படுகிறது. தற்போது மஞ்சள் நடவுப்-பணி நடந்து வரும் நிலையில் விதை மஞ்சள் விலை உயர்ந்துள்ளது. கடந்த மே மாதம் ஒரு கிலோ, 40 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது விரலி மஞ்சள் ரகம், 70 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதுபற்றி கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமை-யாளர் சங்க தலைவர் பெரியசாமி கூறியதாவது: எனது வயலில், 2.5 ஏக்கரில் விரலி ரக மஞ்சள் சாகுபடி செய்திருந்தேன். அறுவடையின்போது, 5,000 கிலோ வரை விதை மஞ்சள் தனியாக எடுத்துள்ளேன். கடந்த மே மாதம் ஒரு கிலோ, 40 ரூபாய்க்கும் கடந்த வாரம், 60 ரூபாய்க்கும் விற்-பனை செய்தேன். பவானிசாகர் அணைக்கு நீர்வ-ரத்து உள்ளதாலும், பருவமழை கை கொடுக்கும் என்ற நம்பிக்-கையில் மஞ்சள் சாகுபடி துவங்கி உள்ளது. இவ்-வாறு கூறினார்.
ஈரோடு மஞ்சள் வியாபாரிகள் மற்றும் குடோன் உரிமையாளர் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி கூறியதாவது:
விதை மஞ்சள் விலை உயர்ந்து தற்போது ஒரு கிலோ, 70 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தற்-போது பரவலாக மழை பெய்து வருவதால், மஞ்சள் சாகுபடி துவங்கி உள்ளது. தமிழகம் மட்-டுமின்றி கர்நாடகா, மஹாராஷ்டிரா, தெலுங்-கானா மாநிலங்களிலும் விதை மஞ்சளுக்கு அதிக தேவை உள்ளது. எனவே விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. இவ்வாறு கூறினார்.