/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கீழ்பவானி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் 15ல் தண்ணீர் திறக்க அதிகாரிகள் உறுதி கீழ்பவானி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் 15ல் தண்ணீர் திறக்க அதிகாரிகள் உறுதி
கீழ்பவானி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் 15ல் தண்ணீர் திறக்க அதிகாரிகள் உறுதி
கீழ்பவானி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் 15ல் தண்ணீர் திறக்க அதிகாரிகள் உறுதி
கீழ்பவானி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் 15ல் தண்ணீர் திறக்க அதிகாரிகள் உறுதி
ADDED : ஜூலை 20, 2024 07:11 AM
பெருந்துறை : கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து, முதல் போகத்துக்கான நீரை திறக்க வலியுறுத்தி, கீழ்ப-வானி பாசன பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில், பெருந்துறையை அடுத்த சூளைக்காத்தான்வலசு அருகில் வாய்க்காலில் இறங்கி, விவசாயிகள் மற்றும் மக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்-டனர். கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ரவி தலைமை வகித்தார்.
பெருந்துறை துணை வருவாய் தாசில்தார் நல்லசிவம், பொதுப்-பணித் துறை உதவி பொறியாளர் பவித்ரன் பேச்சுவார்த்தை நடத்-தினர். அதை தொடர்ந்து நீர்வளத் துறை செயற்பொறியாளர் திரு-மூர்த்தி மற்றும் அணை செயற்பொறியாளர் அருள் அழகன் ஆகியோர், ரவியிடம் மொபைல்போனில் பேசினர். ஆக., 10ம் தேதிக்குள் கான்கிரீட் பணிகளை முடித்து, ஆக., ௧5ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என உத்தரவாதம் கொடுத்தனர். இதைய-டுத்து விவசாயிகள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். வரும், 23, 26, 30ம் தேதிகளில் பல்வேறு இடங்களில் நடக்கவிருந்த ஆர்ப்பாட்டங்களை, தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக விவசா-யிகள் கூறினர்.
அதேசமயம் ஆக., ௧0ம் தேதிக்குள் கான்கிரீட் பணியை முடிக்-காவிட்டால், பவானிசாகர் அணை அல்லது ஈரோடு கோண வாய்க்கால் பகுதியில் உள்ள நீர் வளத்துறை அலுவலகத்தை முற்-றுகையிடுவோம் என்றும், விவசாயிகள் எச்சரிக்கை விடுத்தனர்.