மானிய கடன் பெற்றநிறுவனங்களில் ஆய்வு
மானிய கடன் பெற்றநிறுவனங்களில் ஆய்வு
மானிய கடன் பெற்றநிறுவனங்களில் ஆய்வு
ADDED : மார் 15, 2025 01:45 AM
மானிய கடன் பெற்றநிறுவனங்களில் ஆய்வு
ஈரோடு:ஈரோடு மாவட்ட தொழில் மையம் மூலம், நசியனுார் மற்றும் கோபியில், அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் மற்றும் தாட்கோ சார்பில் மானிய கடனுதவி திட்டத்தில் உடற்பயிற்சி கூடம் நடத்துகின்றனர். இத்திட்டத்துக்கு, 35 சதவீத முதலீட்டு மானியமும், வங்கி கடனை முறையாக திரும்ப செலுத்துவதால், 6 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படுகிறது. இதுபற்றி பயனாளிகளிடம் கலெக்டர் உரையாடினார்.
பின், தமிழக அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் ஒரு முறை பயன்படுத்தும் மற்றும் துாக்கி எறியப்படும் பிளாஸ்டிக்குகளுக்கு மாற்று பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனத்தை ஆய்வு செய்தார். 68 லட்சம் ரூபாய் கடனுதவியுடன், 18.32 லட்சம் ரூபாய் மானியம் பெற்று மறுசுழற்சி செய்யும் பைகளை உற்பத்தி செய்வதை பார்வையிட்டார். வணிக செயல்பாட்டு யோசனைகள் தெரிவிக்கப்பட்டது.
மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திருமுருகன், தாட்கோ மாவட்ட மேலாளர் அர்ஜூன் ஆகியோர் உடனிருந்தனர்.