/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பட்டியலின மக்களுக்கு நிலம் கேட்டு முறையீடு பட்டியலின மக்களுக்கு நிலம் கேட்டு முறையீடு
பட்டியலின மக்களுக்கு நிலம் கேட்டு முறையீடு
பட்டியலின மக்களுக்கு நிலம் கேட்டு முறையீடு
பட்டியலின மக்களுக்கு நிலம் கேட்டு முறையீடு
ADDED : மார் 14, 2025 01:40 AM
பட்டியலின மக்களுக்கு நிலம் கேட்டு முறையீடு
ஈரோடு:சமூக நீதி மக்கள் கட்சி நிறுவன தலைவர் வடிவேல், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வழங்கிய மனுவில் கூறியதாவது: மொடக்குறிச்சி தாலுகா வடுகப்பட்டியில், 50 ஆண்டுகளுக்கு முன் நில குடியேற்ற சங்கத்துக்கு, 483 ஏக்கர் விவசாய நிலம், பட்டியலின அருந்ததியர் சமுதாய ஏழை விவசாய கூலி தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
அதன்பின் ஈரோடு வருவாய் கோட்ட அலுவலரின் செயல்முறைப்படி, நில ஒப்படைவு ரத்து செய்யப்பட்டு, தரிசாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலங்களை விற்பனை, அடமானம், குத்தகை என மோசடி செய்து, பிற சமுதாயத்தினர் ஆக்கிரமித்துள்ளனர். இதுபற்றி வருவாய் துறையினர் ஆய்வு செய்துள்ளனர். அரச்சலுார், வடுகப்பட்டி கிராமங்களை சேர்ந்த அருந்ததியர் தனித்தனியாக மனு வழங்கி உள்ளனர்.
இதுபற்றி விசாரித்து உரியவர்களுக்கு நிலம் ஒப்படைப்பு செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.