Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/முதுநிலை பட்டதாரி ஆசிரியர் ஆர்ப்பாட்டம்

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் ஆர்ப்பாட்டம்

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் ஆர்ப்பாட்டம்

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் ஆர்ப்பாட்டம்

ADDED : ஜூன் 15, 2024 07:26 AM


Google News
ஈரோடு : தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் சுதாகுமார் தலைமையில், ஈரோடு, முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில், ஆர்ப்பாட்டம் செய்தனர். மாநில துணை தலைவர்கள் பிரபாகரன், சுப்புலட்சுமி, மாவட்ட மகளிரணி தலைவர் பரிமளம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் இளங்கோவன் வரவேற்றார்.

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சம்பளத்துடன் கூடிய விடுப்பை ஒப்படைப்பு செய்ய வேண்டும். உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் பழைய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும். கடந்த, 2009க்கு பின் பணியேற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய பேரிழப்பான ஊதிய முரண்பாட்டை சரி செய்ய வேண்டும். புதிய ஊதியக்குழுவில் முதுகலை ஆசிரியருக்கு ஊதிய விகிதத்தில் உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும்.

ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு நடைமுறையில் உள்ள புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் காப்பீடு நிறுவனங்களின் முறைகேடுகளை கண்டித்தும், கட்டணமில்லா மருத்துவ சிகிச்சையை நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு பள்ளி ஆசரியர்களுக்கும், மாணவர்களுக்கும் கிடைக்கும் அனைத்து நடைமுறைகளும், வளங்களும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் கிடைக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us