/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அண்ணன் சாவில் மர்மம்; சத்தி வாலிபர் புகார் அண்ணன் சாவில் மர்மம்; சத்தி வாலிபர் புகார்
அண்ணன் சாவில் மர்மம்; சத்தி வாலிபர் புகார்
அண்ணன் சாவில் மர்மம்; சத்தி வாலிபர் புகார்
அண்ணன் சாவில் மர்மம்; சத்தி வாலிபர் புகார்
ADDED : மார் 14, 2025 01:37 AM
அண்ணன் சாவில் மர்மம்; சத்தி வாலிபர் புகார்
ஈரோடு:அண்ணன் சாவில் மர்மம் இருப்பதாக, சத்தியை சேர்ந்தவர், ஈரோடு எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார்.
சத்தியமங்கலம், கொமராபாளையம் காலனியை சேர்ந்த மாதேஷ் மகன் துரைராஜ், 25; ஈரோடு எஸ்.பி., ஜவகரிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: என் அண்ணன் பெயிண்டர் பசுவராஜ், ஈரோடு கருங்கல்பாளையம் ராஜாஜிபுரத்தை சேர்ந்த பேபி சித்ராவை காதலித்து திருமணம் செய்தார். தம்பதிக்கு மாதேஷ் என்ற மகன் உள்ளார். நான்கு ஆண்டுக்கு முன் பேபி சித்ராவுக்கு வேறு நபர்களுடன் தொடர்பு இருந்தது. அண்ணனுக்கு தெரிந்ததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதனால் மகனுடன் தந்தை வீட்டுக்கு இரு மாதங்களுக்கு சென்று சென்று விட்டார். கடந்த, 9ல் ஈரோட்டில் உறவினர் இல்ல திருமணத்துக்கு சென்ற அண்ணன் பசவராஜ், மகனை பார்க்க பேபி சித்ரா வீட்டுக்கு சென்றார். அங்கிருந்த நான்கு பெண்கள் உள்ளிட்ட ஐந்து பேர் அண்ணனை சரமாகியாக தாக்கியுள்ளனர்.
இதனால் சத்தியமங்கலம் செல்ல பசுவராஜ் பஸ் ஏறியபோது, கருங்கல்பாளையம் ஸ்டேஷனில் இருந்து விசாரணைக்கு வருமாறு, மொபைல்போனில் போலீசார் அழைத்துள்ளனர். சிறிது நேரத்தில் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் செல்வதாகவும், உடம்பு வலியாக இருக்கிறது. தன்னால் நடக்க முடியவில்லை என்று, உறவினர் ஒருவரிடம் மொபைல்போனில் தெரிவித்துள்ளார். இந்நிலையில்தான் சாலையில் நடந்து சென்றவர் சுருண்டு விழுந்து இறந்துள்ளார். அண்ணன் சாவுக்கு பேபி சித்ரா மற்றும் அவரது குடும்பத்தினரே காரணம். அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.
பசுவராஜ் உடல் பாகங்கள் சோதனைக்காக சென்னை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் கிடைக்கும் தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று, கருங்கல்பாளையம் போலீசார் தெரிவித்தனர்.