/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ நாய்களால் பலியான ஆடுகளுக்குஇழப்பீடு; முத்தரசன் எதிர்பார்ப்பு நாய்களால் பலியான ஆடுகளுக்குஇழப்பீடு; முத்தரசன் எதிர்பார்ப்பு
நாய்களால் பலியான ஆடுகளுக்குஇழப்பீடு; முத்தரசன் எதிர்பார்ப்பு
நாய்களால் பலியான ஆடுகளுக்குஇழப்பீடு; முத்தரசன் எதிர்பார்ப்பு
நாய்களால் பலியான ஆடுகளுக்குஇழப்பீடு; முத்தரசன் எதிர்பார்ப்பு
ADDED : மார் 14, 2025 01:35 AM
நாய்களால் பலியான ஆடுகளுக்குஇழப்பீடு; முத்தரசன் எதிர்பார்ப்பு
ஈரோடு:“நாய்களால் பலியான ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்,” என்று, தமிழக அரசுக்கு இ.கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன் கோரிக்கை
விடுத்துள்ளார்.இ.கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன், ஈரோட்டில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழகம் மீது மத்திய அரசு காழ்ப்புணர்ச்சியை திணிப்பது கவலையளிக்கிறது. தமிழகம், தமிழக மக்கள் மீது அரசியல் யுத்தம் நடத்துகிறது. அனைத்து மாநிலங்களும் இணைந்ததுதான் இந்தியா. சில மாநிலத்தை தள்ளிவிட்டு இந்தியா இருக்க முடியாது.
ரயிலில் முன்பதிவு செய்தோர், உணவு தேர்வு செய்யும்போது முன்பு, 'சைவம், அசைவம்' என படிவத்தில் கோரி உணவு வழங்குவர். தற்போது இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர் என கேட்டு மத உணர்வை காட்டி, பிரிவினையை ஏற்படுத்துகிறது.
பா.ஜ., ஆட்சி அல்லாத தமிழகம், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம், தெலுங்கானா போன்ற மாநிலங்கள் மீது தங்கள் குறுகிய அரசியல் நோக்கத்தை மத்திய அரசு திணிக்கிறது.
புதிய கல்வி கொள்கையை ஏற்காவிட்டால், 2,000 கோடி நிதி கிடைக்காது எனவும், தமிழகத்தை அநாகரீகமானவர்கள் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசுவதை கண்டிக்கிறோம். அவர் பதவி விலக வேண்டும்; அல்லது பதவி நீக்கம் செய்ய
வேண்டும். ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும். அவற்றால் கடிபட்டு இறந்த ஆடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு கூறினார்.