/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ திம்பம் மலைப்பாதையில்இரு அரசு பஸ்கள் மோதல் திம்பம் மலைப்பாதையில்இரு அரசு பஸ்கள் மோதல்
திம்பம் மலைப்பாதையில்இரு அரசு பஸ்கள் மோதல்
திம்பம் மலைப்பாதையில்இரு அரசு பஸ்கள் மோதல்
திம்பம் மலைப்பாதையில்இரு அரசு பஸ்கள் மோதல்
ADDED : மார் 15, 2025 01:43 AM
திம்பம் மலைப்பாதையில்இரு அரசு பஸ்கள் மோதல்
சத்தியமங்கலம்:கோவையிலிருந்து கர்நாடக மாநிலம் மைசூருக்கு, தமிழக அரசு பஸ், 80 பயணிகளுடன் நேற்று புறப்பட்டது. சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப்பாதை வழியாக, 2:00 மணிக்கு சென்றது. அதேசமயம் எதிரே மைசூருவில் இருந்து திண்டுக்கல்லுக்கு, கர்நாடகா மாநில அரசு பஸ், ௮௦ பயணிகளுடன் வந்தது. மலைப்பாதையின், ௨௩வது கொண்டை ஊசி வளைவில் எதிரெதிரே வந்தபோது எதிர்பாராதவிதமாக பக்கவாட்டில் இரு பஸ்களும் மோதிக்கொண்டன. இதில் பயணிகள் காயம் அடையவில்லை. அதேசமயம் மலைப்பாதையில், ௪௫ நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.