/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அணை கட்ட நிலம் வழங்கிய விவசாயிகளுக்குபாசன நீரை வழங்க வலியுறுத்தி போராட முடிவு அணை கட்ட நிலம் வழங்கிய விவசாயிகளுக்குபாசன நீரை வழங்க வலியுறுத்தி போராட முடிவு
அணை கட்ட நிலம் வழங்கிய விவசாயிகளுக்குபாசன நீரை வழங்க வலியுறுத்தி போராட முடிவு
அணை கட்ட நிலம் வழங்கிய விவசாயிகளுக்குபாசன நீரை வழங்க வலியுறுத்தி போராட முடிவு
அணை கட்ட நிலம் வழங்கிய விவசாயிகளுக்குபாசன நீரை வழங்க வலியுறுத்தி போராட முடிவு
ADDED : மார் 28, 2025 01:05 AM
அணை கட்ட நிலம் வழங்கிய விவசாயிகளுக்குபாசன நீரை வழங்க வலியுறுத்தி போராட முடிவு
புன்செய்புளியம்பட்டி:தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் அலுவலக திறப்பு விழா மாவட்ட செயலாளர் நடராஜன் தலைமையில், புன்செய்புளியம்பட்டியில் நேற்று நடந்தது. நிறுவனர் ஈசன் முருகசாமி திறந்து வைத்தார். அதை தொடர்ந்து புங்கம்பள்ளி, விண்ண பள்ளி, நால்ரோடு, கீழ் முடுதுறை, ராஜன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கிளைகள் திறந்து வைக்கக்கப்பட்டன.
பின்னர் நடந்த ஆலோசனை கூட்டத்தில், பவானிசாகர் அணை கட்ட நிலம் வழங்கிய, எட்டு கிராமங்களை சேர்ந்த விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான, பவானிசாகர் அணையில் இருந்து நீரேற்று முறையில் தண்ணீரை பம்பிங் செய்து, ஏரி அமைத்து நீர்ப்பாசன வசதி செய்து தர கோரி அரசை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது: பவானிசாகர் அணை கட்டுவதற்கு நிலம் வழங்கிய விவசாயிகள் தற்போது புதுப்பீர் கடவு, பட்ரமங்கலம், பசுவபாளையம், ராஜன் நகர், காந்தி நகர், வடவள்ளி உள்ளிட்ட 8 கிராமங்களில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மாற்று இடம்
மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. அவர்களது வாழ்வாதாரத்திற்கு தண்ணீர் வழங்கப்படவில்லை. மூன்று மாவட்ட விவசாயிகளின் பாசனத்திற்கும் குடிநீருக்கும் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணைக்கு நிலம் வழங்கிய மக்கள் புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் உரிமையான பாசன நீரை வழங்க திட்டம் நிறைவேற்ற வேண்டும். இதற்காக தமிழக அரசை வலியுறுத்தும் விதமாக காத்திருப்பு போராட்டம் உள்ளிட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.