ADDED : ஜன 11, 2024 04:35 AM

பழநி : பழநி ஆண்டவர் மகளிர் கலை கல்லுாரியில் சிவாலய யோகா மையம் சார்பில் 600 பேர் யோகாசனம் செய்தனர்.
சிவாலயா யோகா மையம் சார்பில் 600 பேர் பங்கு பெற்ற 108 சூரிய நமஸ்காரம் நிகழ்ச்சியுடன் யோகாசனம் துவங்கியது. இதில் 16 மாணவர்கள் நோபல் பரிசு பெறக்கூடிய உலக சாதனை புரிந்தனர். யோகாசனம் உள்ளிட்ட தனி திறமைகளை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியில் உலக யோகா சம்மேளன துணைத் தலைவர் ராமலிங்கம், பேராசிரியர் சாந்தி, மற்றும் சித்தநாதன் அன் சன்ஸ் விஜயகுமார், யோகா ஆசிரியர் முருகன், சிவாலய யோகா மைய நிறுவனர் சிவக்குமார் பங்கேற்றனர்.