/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ஓட்டல் தோசையில் புழு; வைரலாகும் வீடியோ ஓட்டல் தோசையில் புழு; வைரலாகும் வீடியோ
ஓட்டல் தோசையில் புழு; வைரலாகும் வீடியோ
ஓட்டல் தோசையில் புழு; வைரலாகும் வீடியோ
ஓட்டல் தோசையில் புழு; வைரலாகும் வீடியோ
ADDED : ஜூலை 19, 2024 05:35 AM
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் ஓட்டல் ஒன்றில் தோசையில் புழு இருந்ததால் சாப்பிட சென்றவர் அதிர்ச்சி அடைய அதன் வீடியோ வைரலாகி வருகிறது.
ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட் எதிரே தனியார் ஓட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இங்கு ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த சுரேஷ் உணவருந்த சென்றார். சப்ளையரிடம் பரோட்டா கொண்டு வர சொல்லி சாப்பிட்டார். கெட்டுப்போன வாசனை வந்ததால் தோசை கொண்டு வரச் சொன்னார்.
தோசையில் சாம்பார் ஊற்றி சாப்பிட்ட போது அதில் புழு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதை தனது அலைபேசியில் வீடியோவாக எடுத்தார்.
ஓட்டல் உரிமையாளரிடம் வாக்குவாதம் செய்து உணவுக்குரிய தொகையை கொடுத்து விட்டு சென்றார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.