ADDED : செப் 11, 2025 06:05 AM
நெய்க்காரபட்டி: பழநிக்கு திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை உரல் பட்டியை சேர்ந்த பொன்மலர் 39, உறவினர் வெள்ளியங்கிரி 52, உடன் டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை)வந்தார். அதன் பின் சொந்த ஊருக்கு திரும்பினார்.
அழகாபுரி அருகே வரும்போது எதிரே வந்த டிப்பர் லாரி மோதியதில் இறந்தார். பழநி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.